1980 ஆம் ஆண்டு, 108 மில்லியன் பேருக்கு இருந்த நீரிழிவு நோயானது 2014 ல் நடத்தப்பட்ட ஆய்வில் 422 மில்லியான உயர்ந்திருக்கிறது.
நீரிழிவு நோயை முழுமையாக குணபடுத்த முடியாது என்றாலும், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் முறைகளில் ஒழுங்குமுறையை ஏற்படுத்திக் கொண்டால் போதும், நீரிழிவு நோயின் கடுமையான தாக்கத்தில் இருந்து தப்பலாம். மாவுச்சத்து மிகுதியான உணவை உட்கொள்ளும்போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என்பதால், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதே சிறந்தது. காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள், கோழி, இறைச்சி மற்றும் மீன் போன்ற ஆரோக்கியமான உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவு.
உடல் எடையை குறித்தும் உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மாறுபடும். 1980 ஆம் ஆண்டு, 108 மில்லியன் பேருக்கு இருந்த நீரிழிவு நோயானது 2014 ல் நடத்தப்பட்ட ஆய்வில் 422 மில்லியான உயர்ந்திருக்கிறது. தற்போதைய சூழலில் இரசாயனமில்லாத உணவுகளே கிடையாது. எல்லாவற்றிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயனங்கள் நிறைந்திருக்கிறது. சுவைக்கு அடிமையாகி, நோய்களை நாமே வரவழைத்து கொண்டிருக்கிறோம். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க சில ஆலோசனைகள் இங்கே.
நாள் ஒன்றில் மொத்தமாக மூன்று வேளை உணவு எடுத்துக் கொள்ளாமல், ஐந்து வேளையாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும் உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
முற்றிலுமாக மாவுச்சத்து மிகுந்த உணவை தவிர்த்திடாமல், மாவுச்சத்து குறைவாக உள்ள முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பார்லி, பால், சீஸ், சோயா மற்றும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
நார்ச்சத்துள்ள உணவு, ஜீரணத்தை தாமதப்படுத்துவதால், நீண்ட நேரத்திற்கு உங்களுக்கு பசியுணர்வு இருக்காது. கேரட், பீன்ஸ், பார்லி, ப்ரோக்கோலி, பீட்ரூட், ஆப்பிள், பேரிக்காய், பெர்ரி மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிடலாம். இவற்றில் நார்ச்சத்து மிகுதியாய் இருப்பதால், இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யாது.
செயற்கை இனிப்பூக்கிகளை பயன்படுத்தாமல், தேங்காய், வெல்லம் மற்றும் தேன் போன்று இயற்கையாகவே இனிப்பு நிறைந்திருக்கும் உணவுகளை சேர்த்து கொள்ளலாம். இயற்கையாக கிடைப்பதாயினும், அளவாக பயன்படுத்துவதே சிறந்தது.
அவகேடோ, ஆலிவ், நட்ஸ் மற்றும் கெனோலா எண்ணெய் ஆகியவற்றில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு இருக்கிறது. இது உடலில் இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.
சரியான இடைவெளியில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது சிறந்தது. இது உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருப்பதோடு, உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். முலைக்கட்டிய பயறுகள், தானியங்கள், முழு கோதுமை, சிவப்பு அரிசி போன்றவற்றை சமைத்து சாப்பிடலாம்.
கெட்சப், சாஸ் போன்ற உணவுகளில் உடல் பருமனை அதிகரிக்க செய்யும் சர்க்கரை ஒளிந்திருக்கிறது. துரித உணவுகளை தவிர்ப்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதோடு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உடல் நலனையும் பாதுகாக்கிறது. உணவில் கவனம் செலுத்தினாலே போதும் நோய்களை விரட்டி அடிக்கலாம்.
