பல்கலைக் கழகங்களில் தலித்களுக்கும் பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு குறைக்கப்படுவதாகக்கூறி பல்கலைக்கழக மானியக் குழுவை எதிர்த்து தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளன.
கடந்த மார்ச்சில் பல்கலைக்கழக மானியக் குழுவின் இடஒதுக்கீடு கொள்கையானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய பல்கலைக்கழக சட்ட விதிகளின்படி தலித்களுக்கு 15 விழுக்கடும் பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடும் மற்ற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடும் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் மத்தியப் பல்கலைக்கழகங்களில் 700 பதவிகளுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதில் 2.5 விழுக்காடு தலித்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. பழங்குடியினருக்கு எந்த இடஒதுக்கீடும் இல்லை என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
பல்கலைக் கழகங்களில் இதுவரை சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்தும் பலதரப்பட்ட பிரிவுகளிலிருந்தும் கல்விப் பணி ஆற்ற வருவதால் பன்முகத்தன்மை நிலவுகிறது. தற்போது இட ஒதுக்கீடு மட்டும் குறைக்கப்படுவதில்லை. இதன் மூலம் பன்முகத்தன்மையும் நீக்கப்படுகிறது என்று தலித் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. விரைவில் பல்கலைக்கழக மானியக் குழு தனது கொள்கைளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அப்படித் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
