ஏர்டெல்' பின்னுக்கு தள்ளப்பட்டது!! வோடபோன் - ஐடியா' இணைப்பு


புதுடில்லி : தொலை தொடர்பு நிறுவனங்களான, வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்களின் இணைப்பு, முழுமை பெற்றுள்ளது. இதையடுத்து, நிறுவனத்தின் பெயரை, 'வோடபோன் ஐடியா லிமிடெட்' என மாற்றி இருப்பதாக, ஐடியா செல்லுலார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களின் இணைப்புக்கு, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அனுமதி வழங்கிய சில மணி நேரத்துக்குள்ளாக, இந்த பெயர் மாற்றம் குறித்த செய்தியை, ஐடியா செல்லுலார் அறிவித்துள்ளது. இந்த இரு நிறுவனங்களின் இணைப்புக்கு பின், 15 ஆண்டுகளாக முதன்மை இடத்தில் இருந்து வந்த, 'ஏர்டெல்' நிறுவனம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தற்போதைய நிலையில், இந்திய தொலை தொடர்பு துறையில், 'வோடபோன் ஐடியா, ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம்' ஆகிய மூன்று நிறுவனங்கள் வசமே பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலைஏற்பட்டுள்ளது. இந்த மாபெரும் இணைப்பை அடுத்து, வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 40.8 கோடியாக உயர்ந்துள்ளது. சந்தை பங்களிப்பு, 35 சதவீதமாகும்.

இணைப்புக்கு பிறகான புதிய நிறுவனத்தின்தலைவராக, ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவரான, குமார்மங்கலம் பிர்லா பொறுப்பேற்கிறார். நிர்வாக குழுவில் இயக்குனர்கள் எண்ணிக்கை 12 ஆக இருக்கும்.

இது குறித்து, குமார்மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளதாவது: இன்று, இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இது, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இது, ஒரு மாபெரும் வணிகத்தை உருவாக்குவதை விடவும் பெரியதாகும். புதிய இந்தியாவை உருவாக்கவும், இளைஞர்களின் ஆசையை பூர்த்தி செய்யவும் உதவும் வகையில் எங்கள் பார்வை இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...