தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
மீது மாணவர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, அப்பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பாக மாணவர்கள் அளித்த புகார் மனு:
ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சரிவர பணியாற்றவில்லை. மாணவ-மாணவிகளுக்கான இலவச திட்டங்களை செயல்படுத்துவதிலும், பள்ளியின் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வதிலும் அலட்சியம் காட்டி வருகிறார். பள்ளியில் குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால், 10, 12-ம் வகுப்புகளில் முழுத்தேர்ச்சி பெறமுடியாமல் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் குறைந்துவிட்டது.