தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்
அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யலாம்.

கடந்த 24 மணி நேரத்தில், சிவகாசியில் 13 செ.மீ, ஸ்ரீவில்லிபுத்தூர், வேலூரில் தலா 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...