பணியை முடிக்காமல் திரும்பாதீங்க! அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு!

'முக்கொம்பு அணையின் தற்காலிக சீரமைப்பு பணி முடிந்த பிறகே, அதிகாரிகள்
சென்னை திரும்ப வேண்டும்' என, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம், முக்கொம்பு அணையின் ஒன்பது மதகுகள், ஆகஸ்ட், 22ல் உடைந்து விழுந்தன.


தனியார் நிறுவனம் :

இதனால், கொள்ளிடம் ஆற்றின் வழியாக, தொடர்ந்து நீர் வெளியேறி வருகிறது.
இந்த நீரை தடுத்து நிறுத்துவதற்காக, அணையில் தற்காலிக சீரமைப்பு பணியை அரசு துவக்கிஉள்ளது. சில தினங்களுக்கு முன், முக்கொம்பு அணையை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி, தற்காலிக சீரமைப்பு பணிக்காக, 95 லட்சம் ரூபாய் ஒதுக்கினார். இந்த நிதியில், சீரமைப்பு பணியை, தனியார் நிறுவனம் ஒன்று செய்து வருகிறது.


பணி துவங்கி, 10 நாட்களாகியும், மணல் மூட்டைகளை அடுக்கி, நீரை தடுக்கும் நடவடிக்கைகள் முடியவில்லை. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று முக்கொம்பு அணைக்கு சென்றார். தற்காலிக சீரமைப்பு பணி, 40 சதவீதம் கூட முடியவில்லை என, குற்றம் சாட்டினார்.


சாகுபடிக்கு நீர் கேட்டு விவசாயிகளும் போராட்டத்தை துவக்கி உள்ளதால், பணியை விரைந்து முடிக்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


அதிகாரிகள் குழு :


இதையடுத்து, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர், பக்தவச்சலம் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், சென்னையில் இருந்து நேற்று, முக்கொம்பு அணைக்கு சென்றனர். 'சீரமைப்பு பணி முடிந்த பிறகே, அதிகாரிகள் குழுவினர் சென்னை திரும்ப வேண்டும்' என, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...