குடியரசு தலைவர்,பிரதமர் "பயணம் செய்ததற்கான கட்டண பாக்கி ரூ.1,146 கோடி"!

இந்திய குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் தனி விமானங்களில்
பயணம் செய்த வகையில் 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு மத்திய அரசு ரூ.1,146 கோடி கட்டண பாக்கி வைத்துள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகிய தேசியத் தலைவர்கள் பாதுகாப்பு கருதி தனி விமானங்களில் பயணம் செய்கிறார்கள்.

இவர்களுக்கான தனி விமானப் பயண ஏற்பாடுகளை பொதுத்துறை நிறுவனமான 'ஏர் இந்தியா' விமான நிறுவனம் கவனிக்கிறது.

பயணிகள் விமானத்தை, தலைவர்களின் வசதிக்கேற்ப மாற்றி அமைத்து அந்த நிறுவனம் வழங்குகிறது.

அவற்றுக்கான கட்டணத் தொகையை யார் பயணம் செய்கிறார்களோ அதற்கு ஏற்ப ராணுவ அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சரவை செயலகம் வழங்கும்.

இப்படி தலைவர்கள் தனி விமானங்களில் பயணம் செய்த வகையில் 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கட்டண பாக்கி தொடர்பாக அந்த நிறுவனத்திடம், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு அந்த நிறுவனம், ஏறத்தாழ 10 ஆண்டுகளாக இந்த விதத்தில் மத்திய அரசு வைத்துள்ள கட்டண பாக்கி ரூ.1,146 கோடி என தெரிவித்து இருக்கிறது.


ராணுவ அமைச்சகம் ரூ.211.17 கோடி, மத்திய அமைச்சரவை செயலகமும், பிரதமர் அலுவலகமும் ரூ.543.18 கோடி, வெளியுறவுத்துறை அமைச்சகம் ரூ.392.33 கோடி பாக்கி வைத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு மத்திய அரசு விமான கட்டண பாக்கி வைத்துள்ள பிரச்சினை, 2016-ம் ஆண்டு தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்குகிற பொதுத்துறை நிறுவனத்துக்கு மத்திய அரசே ரூ.1,146 கோடி பாக்கி வைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...