திருவனந்தபுரத்தில் சைக்கிள் ஓட்டிச் சென்ற வாலிபரை வழி மறுத்த காவல்துறையினர் 'ஓவர் ஸ்பீடு' எனக் கூறி 2000 ரூபாய் வசூலித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த காசிம் என்பவர் கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் கும்பாலா பகுதியில் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கேரள போலீஸார் காசிமை வழிமறித்துள்ளனர். சைக்கிளில் வேகமாக ஓட்டி வந்ததற்காக அபராதம் கட்டுங்கள் என்ற காவல்துறையினர் வார்த்தைகள் காசிமை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் ஹெல்மெட் ஏன் அணியவில்லை என்று கூறி சைக்கிள் டயரை பஞ்சர் செய்துள்ளனர். காவல்துறையினரிடம் போராட முடியாது என முடிவெடுத்த காசிம் அபராதம் செலுத்த ஒத்துக்கொண்டார்.
