மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானாஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
மேலும், 'டிசம்பர் 15ம் தேதிக்குள் 4 மாநிலங்களுக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்படும். இந்த 4 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது" என்றார்.
தொடர்ந்து தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 12, 20 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும்.
அதேபோன்று மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 28ம் தேதியும், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு டிசம்பர் 7ம் தேதியும் தேர்தலானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிகை டிசம்பர் 11ம் தேதி நடைபெறும்.
