அமைச்சர் செங்கோட்டையனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து


தேசிய துாய்மை பள்ளி விருதுகள் பெற்ற, மாநிலங்கள் பட்டியலில், தமிழகம், இரண்டாம் இடம் பெற்றதற்கான சான்றிதழை, முதல்வர் பழனிசாமியிடம் அளித்து, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் வாழ்த்து பெற்றார்

*தேசிய அளவில், துாய்மை பள்ளி விருது பெற, கரூர் மாவட்டம், டி.செல்லாண்டிப்பாளையம், அரசு உயர்நிலைப் பள்ளி.தேனி மாவட்டம், கொம்பை தொழு, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி; சிவகங்கை மாவட்டம், எம்.ஆலம்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி; திருவள்ளூர் மாவட்டம், அரியப்பாக்கம், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியும் தேர்வு செய்யப்பட்டன

 *அதேபோல, திண்டுக்கல் மாவட்டம், இ.ஆவாரம்பட்டி, அரசு கே.ஆர்., உயர்நிலைப் பள்ளி; அரியலுார் மாவட்டம், சிலுவைசேரி, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியும் தேர்வாகின

*இப்பள்ளிகளுக்கு, செப்., 18ல், டில்லியில் நடந்த விழாவில், தேசிய அளவில் துாய்மை பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது

*தேசிய துாய்மை பள்ளி விருதுகள் பெற்ற மாநிலங்கள் பட்டியலில், தமிழகம், இரண்டாம் இடம் பெற்றதற்கான சான்றிதழும் தரப்பட்டது. இவ்விருதுகளை, சென்னையில், நேற்று முன்தினம், முதல்வர் பழனிசாமியிடம் காண்பித்து, அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து பெற்றார்

*இத்துறைக்கு அமைச்சராக செங் கோட்டையன் பொறுப்பேற்றது முதல், பொது தேர்வில் ரேங்க் முறை ரத்து, பாடத்திட்டங்கள் சீரமைப்பு, போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் என, பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...