எது புரட்சி....??? யார் போராளி...??

50 ரூபாய் தருகிறோம் என்றால் ஆளாய்பறக்கும் இப் புவியில் 7 நாட்கள் என்ன நடந்தாலும் சரி என போராடி பெற்ற 7 வது ஊதியக்குழுவிலும் பெருத்த ஏமாற்றத்தை சந்தித்த 2009 க்குபின் நியமிக்கப்பட்ட ஓர் இனம் கொதித்தெழுந்து செய்கிறது ஓர் அறவழிப்போர்.



😒😒😒😒😒😒😒😒😒
சமுதாயத்தில் சரியான அங்கீகாரம் கிடைக்காமல்,மலைப்போல்  நம்பிய இயக்கங்கள் கால்குலேட்டரை தூக்கிக்கொண்டு ஓட வறுமை என்ற அரக்கன் பிடியிலும் உழன்று தவித்த நிலையிலும் விடாப்பிடியாக, நின்று கூடுதலாக கிடைக்கும் 3000 அல்லது 4000 த்தை ஓர் ஆண்டுகளாக  புறக்கணித்து களத்திலும்,நிர்வாகத்திலும் போராடும் தன் இனம் காக்க வந்த போராளிகளே உங்களுக்கு ஓர் வீரவணக்கம்.

ஊதியத்தை புறக்கணித்தால் என்ன நடந்துவிடப்போகிறது என கூறும் மூத்தோர்களுக்கு புரியாது இந்த போராட்டம் உள்ளுக்குள் அனலை தனதாக்கிக் கொண்டுள்ள ஓர் எரிமலை என்று நியாமான ஊதியம் கிடைக்கும் வரை இது அனலை தக்கவைத்துகொண்டிருக்கும் போராட்டம் என்று...!!.


😛😛😛😛😛😛😛😛😛
இது போன்ற போராட்டங்களை அவர்கள் நடத்தநினைக்கப்போவதுமில்லை, நடத்தப்போவதுமில்லை நாங்கள் நடத்துகிறோம் இது தான் புரட்சி தன் இனம் காக்க புயலென தோன்றிய புரட்சி...

எங்களுக்கு வழிகாட்ட வேண்டிய நீங்கள் 10 ஆண்டுகளில் செய்த தவறினால் எழுந்த புரட்சி.

இழந்த ஊதியத்தை வென்றெடுப்போம் அல்லது வீழ்ந்துமடிவோம்,முடிந்தால் உதவுங்கள் அல்லது விலகி நில்லுங்கள் போராட்டம் எப்படி நடத்துவது என ஏப்ரல் 2018 ல் 4 நாட்கள் போராட்டத்தில் நிரூபித்தோம் கொடுத்த வாக்கை அரசு செய்யத்தவறினால் மீண்டும் வெடிக்கும் அகிம்சை வழியிலான போராட்டம்  அப்போது புரியும் மீண்டும் போராளிகள் யார் என்று.
🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
பழைய ஊதியம் பெற்றுவரும் எம்மின இருபால் போராளிகளே நாம் எழுதி கொண்டிருப்பது வரலாறு இதன் முடிவை நாம் தான் தீர்மானிப்போம்.

இழந்த ஊதியத்தை விரைவில் வென்றெடுப்போம்...!!

இப்பதிவு தன்மானத்தை இழந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்.

இவண்
ஊதியத்தை விரைவில் வென்றெடுக்க காத்திருக்கும் போராளி
👺👺👺👺👺👺👺👺👺

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...