பள்ளிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி துவக்கம்!


உடுமலை:உடுமலை நகராட்சி டெங்கு ஒழிப்பு பணியாக, 17,933 பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கும் பணி நேற்று துவக்கப்பட்டது.உடுமலை நகராட்சி பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், டெங்கு காய்ச்சலுக்காக மாணவர்கள், பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கும் பணி, உடுமலை நகராட்சியில் துவங்கியுள்ளது.ஆறு நகராட்சி துவக்கப்பள்ளிகளில் படித்து வரும், 326 குழந்தைகளுக்கு நேற்று வழங்கப்பட்டது. தொடர்ந்து, நகராட்சி நடுநிலைப்பள்ளிகளிலுள்ள, 616 மாணவர்கள், நகராட்சி எல்லையிலுள்ள, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள , 7,349 மாணவர்கள், தனியார் பள்ளிகளிலுள்ள, 9,642 மாணவர்கள் என, 17,933 மாணவர்களுக்கும், நகரிலுள்ள அங்கன்வாடி மையங்களிலுள்ள குழந்தைகளுக்கும், ஒரு வாரத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இரு மாதத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் வழங்கப்பட உள்ளது.பொதுமக்களுக்கு...பஸ் ஸ்டாண்ட, அம்மா உணவகம், ராமசாமி நகர், வி.ஜி.ராவ் நகர் விநாயகர் கோவில், சந்தை வளாகம், உழவர் சந்தை என பொது மக்கள் அதிகம் கூடும் மையங்கள் தேர்வு செய்யப்பட்டு, நில வேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.கல்பனா விளையாட்டு மைதானம் உட்பட அதிகாலை, மாலை நேரங்களில் பொது மக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் பகுதிகளிலும், நகர் நல மையத்திலும் வழங்கப்படுகிறது.70 கிலோ தயார்உடுமலை நகராட்சியில், டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிக்காக, 70 கிலோ நில வேம்பு தயார் நிலையில் உள்ளது. தினமும், அம்மா உணவகத்தில் நிலவேம்பு கசாயம் காய்ச்சப்பட்டு, சூடு குறையாத, 10 லிட்டர் கேன்களில் ஊற்றி, பள்ளிகள், பொதுமக்கள் கூடும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...