சாதிப் பாகுபாடு: மாணவி தற்கொலை முயற்சி!



ஃபேஸ்புக் நேரலையில் என் குடும்பத்துக்கு நீதி வேண்டுமென்று கூறி, நேற்று (அக்டோபர் 2) கர்நாடகாவில் 17 வயதுப் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.

கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி லதா. ஐந்து வருடங்களுக்கு முன்பு சாதிப் பாகுபாடு காரணமாக, லதாவின் குடும்பத்தை அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஊரை விட்டுத் தள்ளி வைத்தனர். கிராம மக்கள் யாரும் அவர்களுடன் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளக் கூடாது என்று அறிவித்தனர்.

இது தொடர்பாக, நேற்று ஃபேஸ்புக் நேரலையில் லதா சில தகவல்களை வெளியிட்டார். “என் பெயர் லதா. நான் விஜயபுராவின் கஞ்சனாலாவில் வசித்து வருகிறேன். சாதிப் பாகுபாடு காட்டி, என் குடும்பத்தை ஐந்து வருடங்களுக்கு முன்பு ஊரை விட்டுத் தள்ளிவைத்தனர். இதுகுறித்து நாங்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பபலேஸ்வர் தொகுதி எம்.எல்.ஏ.வான எம்.பி.பாட்டீலின் பெயரைக்கூறி ஊரில் உள்ள சிலர் எங்களைத் தகாத வார்த்தைகள் பேசியும் மிரட்டியும் வருகின்றனர். இதுகுறித்து எம்.பி.பாட்டீலிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அப்போதையை முதலமைச்சர் சித்தராமையா மற்றும் பிரதமர் மோடிக்கும் கூட கடிதங்கள் எழுதினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று லதா தெரிவித்துள்ளார். இனி நான் வாழ்வதற்கான எந்தக் காரணமும் இங்கு இல்லை என்று கூறி, அவர் தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார்.

இது தொடர்பாகப் பேசிய லதாவின் தந்தை, “தற்கொலைக்கு முயன்ற என் மகள் தற்போது தேறி வருகிறார். 24 மணி நேரத் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் இருந்து வருகிறார். தொழிலதிபர் எம்.பி.பாட்டீலின் பெயரைச் சொல்லித்தான் எனது இடம் பிடுங்கப்பட்டது. அவரிடத்தில் புகார் தெரிவித்தும் பயனில்லை” என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக பேசிய விஜயபுரா மாவட்ட காவல் அதிகாரி, லதா தற்போது பேசும் நிலையில் இல்லையென்று கூறினார். “அவர் உடல் தேறியபிறகு விசாரணை முடுக்கிவிடப்படும். லதாவின் தந்தை அளித்த புகாரின்படி விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...