ஆளுநர் தெரிவித்த லஞ்ச குற்றச்சாட்டு: அறிக்கை வெளியிட்டுள்ளது ராஜ்பவன்..!!

துணை வேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் புரண்டதை தடுத்து நிறுத்தியதாகத் தமிழக ஆளுநர் பன்வரி லால் புரோஹித் வெளிப்படையாகக் கூறியது பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. உயர்கல்வி துறையில் அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வந்தாலும் அரசு அமைதியாக இருந்த பட்சத்தில் ஆளுநரின் இந்த குற்றச்சாட்டால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது உயர்கல்வி துறை ஊழல் புகார்கள்.
ராஜ்பவன் வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிற கல்வியாளர்கள் உயர்கல்வி துறையில் ஊழல் நடப்பதாக தன்னிடம் கூறியதாகவே ஆளுநர் தெரிவித்துள்ளாரே தவிர யாரையும் குறிப்பிட்டு இங்கு ஊழல் நடந்துள்ளது என்று குற்றம்சாட்டவில்லை. லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு துறையால் ஒரு துணை வேந்தர் கைது செய்யப்பட்டுள்ளார், இரண்டு துணை வேந்தர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தால் ஒரு துணை வேந்தரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 2018ல் மட்டும் 9 துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், இவர்கள் அனைவரும் சரியான தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஆளுநரின் இந்த வெளிப்படையான மற்றும் நேர்மையான இந்த நியமனங்களால்தமிழ்நாட்டின் உயர்கல்வி துறையின் எதிர்காலம் நிச்சயம் பிரகாசிக்கும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...