``எ ந்த ஒரு அரசுப் பள்ளியையும் மூடும் நோக்கம் இல்லை. அரசுப் பள்ளிகள் விரைவில் கணினி மயமாக்கப்படும்" என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆனால், கோவையில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில், போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவர்கள் மைதானத்தில் வெயிலில் அமர்ந்து படிக்கும் அவலம் நடக்கிறது.
புதிய கட்டடம்
கோவை மாநகரின் சுந்தராபுரம், மதுக்கரை சாலையில் உள்ளது, கே.வி.கே நகர் அரசுத் தொடக்கப்பள்ளி. 2002-ம் ஆண்டு தொடக்கப்பள்ளியாக ஆரம்பித்த, இப்பள்ளி, 2007-ம் ஆண்டில் நடுநிலைப்பள்ளியாகவும், 2011-ம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
