அரசுப் பள்ளி மாணவரும் சாதனையாளர் ஆகலாம்: இஸ்ரோ தலைவர் கே. சிவன்

அரசுப் பள்ளி மாணவரும் நன்றாகப் படித்து அறிவியல்
அறிவை வளர்த்துக் கொண்டால் சாதனையாளர் ஆகலாம் என்று இஸ்ரோ தலைவர் கே. சிவன் கூறினார்*


*நாகர்கோவில் அருகே சரக்கல்விளையில் தான் படித்த பள்ளியில் வெள்ளிக்கிழமை புதிய கட்டடத்தைத் திறந்துவைத்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: விண்வெளித் துறையில் இஸ்ரோ அபார வளர்ச்சியைப் பெற்றுள்ளது*

*இதில் மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் உள்ளிட்டவற்றுக்கு உதவும் வகையிலான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் பணிகளில் இஸ்ரோ இதுவரை ஈடுபடவில்லை*


*மீனவர்கள் கடலில் மீன்களைக் கண்டறியும் தொழில்நுட்பம் உள்பட இஸ்ரோ மீனவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்பங்களை அளித்து வருகிறது*


 *மீனவர்களுக்கு கடல் எல்லைகளைக் கண்டறியும் கருவிகளை கொடுப்பதற்கு இஸ்ரோ கவனம் செலுத்தி வருகிறது. இது மீனவர்களின் எல்லைப் பிரச்னைக்கு தீர்வாக அமையும்*


*இஸ்ரோ செயல்படுத்தும் டெலிமெடிசின் திட்டம் நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு செல்லாமலேயே மருத்துவ வசதியைப் பெறும் திட்டமாகும். இத்திட்டம் மேலும் நவீனப்படுத்தப்படும்*


*2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கான பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது*


*இதன்மூலம் இத்திட்டத்தில் உலகின் நான்காவது நாடாக இந்தியா வெற்றியடையும்.அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரிய சாதனையாளர்களாக வர முடியாது என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்*


 *நன்றாகப் படித்து அறிவியல் அறிவை வளர்த்துக் கொண்டால், அரசுப் பள்ளி மாணவர்களும் சாதனையாளர்களாக வலம் வர முடியும் என்றார் அவர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...