தோனியை பின்னுக்கு தள்ளிய கோலி!


ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளினார் கோலி முறியடித்தார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி நேற்று புனேவில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதில் அந்த அணி 43 ரன்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் விராட் கோலி அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி நான்காவது இடத்துக்கு முன்னேறினார். முன்னதாக இந்த இடத்தில் முன்னாள் கேப்டன் தோனி இருந்தார். தற்போது தோனி 5வது இடத்திற்கு சென்றுள்ளார்.

தெண்டுல்கர் 18,426 ரன்னுடன் முதல் இடத்திலும், கங்குலி 11,363 ரன்னுடன் 2-வது இடத்திலும், டிராவிட் 10,405 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...