NMMS EXAM 2018 - ONLINE REGISTRATION TIPS ( STEP BY STEP INSTRUCTION )



NMMS EXAM ONLINE REGISTRATION TIPS
இணையதளம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து  புகைப்படம் ஒட்டி ரூ.50 உடன் தங்கள் தலைமை ஆசிரியரிடம் 1.10.18 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சென்ற ஆண்டு NMMS தேர்வு - online பதிவு - வழிமுறைகள் :

Step:1
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் "Click to access online portal" பகுதியை Click செய்யவும்

Step:2
திரையில் தோன்றும் WELCOME TO ONLINE PORTAL பக்கத்தில் NMMS EXAM NOV 2017 APPLICATION REGISTRATION - ஐ Click செய்யவும்.

Step:3
திரையில் தோன்றும் Log in பகுதியில் தங்கள் பள்ளிக்குரிய user id & password கொடுக்கவும். (குறிப்பு User id ல் DE0 என்பதில் 0 என்பது zero ஐ குறிக்கும்)

Step:4
தற்போது மீண்டும் ஒரு முறை user id & password கொடுக்கவும்.

Step:5
திரையில் முதலாவதாக தோன்றும் NOMINAL ROLL REGISTRATION ஐ Click செய்து மாணவரின் விவரங்களை பதிவு செய்து SUBMIT கொடுக்கவும். (குறிப்பு : அனைத்து விவரங்களும் விடுபடாமல் நிரப்பப்பட வேண்டும் )

Step : 6
மாணவனின் புகைப்படத்தை update செய்யவும். புகைப்படம்
25 Kb க்கு குறைவாக இருக்க வேண்டும். மாணவனின் விவரங்களை Online -ல் பதிவேற்றம் செய்வதற்கு முன்னதாக புகைப்படங்களை Resize செய்து 25 Kb க்கு குறைவாக Save செய்து கொள்வது வேலையை சுலபமாக்கும்.

Step:7
புகைப்படம் பதிவேற்றம் செய்தவுடன் திரையில் தோன்றும் download ஐ Click செய்து மாணவனின் online registration application ஐ Pdf வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறாக அனைத்து மாணவர்களின் விவரங்களை பதிவு செய்த பின் இறுதியாக...

*SCHOOL WISE REPORT ஐ Click செய்து School report (Summary report) ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

*download செய்யப்பட்ட மாணவனின் online registration application - ஐ 2 நகல்கள் எடுத்து அதில் மாணவர் கையொப்பம், பெற்றோர் கையொப்பம், தலைமை ஆசிரியர் கையொப்பம் ( with Seal) இருப்பதை உறுதி செய்யவும்.

*தவறுதலாக பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை அழிக்கவோ, புகைப்படம் மற்றும் தவறான விவரங்களை INDIVIDUAL REPORT/EDIT/PHOTO UPDATE/DELETE option ஐ பயன்படுத்திதிருத்திக் கொள்ளவோ முடியும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...