வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயலினால், நவம்பர் 16ம் தேதி தமிழக அரசிற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையானது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதையடுத்து, இந்த புயலுக்கு 'கஜா' என இந்திய வானிலை ஆய்வு மையம் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மாநில அரசுகளுக்கு பேரிடர் கால முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக வரும் 15, 16 ஆகிய தேதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுிருந்தது.
முன்னதாக ஆந்திர மாநில கடலோர பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கையானது வாபஸ் பெறப்பட்டிருந்தது அதைத்தொடர்ந்து, தற்போது தமிழக அரசிற்கு நிர்வாக ரீதியில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சார்பாக நவம்பர் 16ம் தேதிக்கென விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கையானது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கஜா புயல் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பேட்டி!
