வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் : தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்

சென்னை: வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இதையடுத்து
இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்டது. தமிழகத்தில் மீண்டும் மழை பெய்வதற்கான சூழல் உருவாகியுள்ளது. வெப்ப சலனம் காரணமாக வங்கக் கடலில் தென்மேற்கு பகுதியில் ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது. அது தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. குறிப்பாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
அதைத் தொடர்ந்து நேற்று மாலையில் விருதுநகர், திருநெல்வேலி, திருப்பூர், திண்டுக்கல், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தேனி, நீலகிரி மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இந்நிலையில், வங்கக் கடலில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வட மேற்கு திசையில் நகர்ந்து வருவதால் தமிழகம், புதுச்சேரியில் இன்றும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களிலும், நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், உள் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும். சென்னையிலும் சில இடங்களிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்றும், பின்னர் 4 அல்லது 5ம் தேதிகளில் மழை பெய்யத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...