6 மாவட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் 4 மணிக்கு முன்பே வீட்டிற்கு செல்ல தமிழக அரசு ஆணை


கஜா புயல் தீவிரமடைந்து மணிக்கு25 கி.மீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், இன்று மாலை முதல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் மாலை 4 மணிக்குள் வீடு திரும்ப அரசு அறிவுறுத்தியுள்ளது.

கஜா புயல் இன்று இரவு கடலூர் -பாம்பன் இடையேகரையை கடக்கும் நிலையில் தமிழகத்தில்பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் இன்று காலை மழை பெய்தது. இதையடுத்து திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது

தொடர்ந்து, இந்த புயலானது தீவிரம் அடைந்து தற்போது கஜா புயல் தமிழகத்தை நோக்கி 25 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

தற்போது சென்னைக்கும், நாகைக்கும் 290 கி.மீட்டர் என்ற ஒரே தொலைவில்கஜா புயல் உள்ளது.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ளஅரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் மாலை 4 மணிக்குள் வீடு திரும்ப அரசுஅறிவுறுத்தியுள்ளது. நாகப்பட்டினம்,திருவாரூர் மாவட்ட ஊழியர்களை 3 மணிக்கே அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக, புகைப்படம் எடுக்கவோ, வேடிக்கை பார்க்கவோ பொதுமக்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும்கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...