புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், அரையாண்டு தேர்வை தள்ளி வைக்கும்படி,
பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளதால், பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கஜா புயலால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு, கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர். பல இடங்களில், பள்ளிகளின் மேற்கூரைகள் சரிந்துள்ளன; வகுப்பறை கட்டடங்கள் இடிந்துள்ளன.
சில பகுதிகளில், அரசின் நிவாரண முகாம்கள், அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் செயல்படுகின்றன. அதனால், இந்த மாவட்டங்களில், நவ., 15 முதல் 5 நாட்களாக, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பல ஊர்களில் மாணவ - மாணவியர் தங்களின் நோட்டு புத்தகம், புத்தக பை உள்ளிட்டவற்றை இழந்து விட்டதால்,பள்ளிக்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது; பள்ளிகளை திறப்பதும் தாமதமாகிறது.