இடைநிலை ஆசிரியர்கள் உறுப்பு தான போராட்டம்!!!



*🔶🔶ஆசிரியர்களின் அடிப்படை ஊதிய விகிதத்தை உயர்த்த கோரி, ரத்த தானம், உறுப்பு தானம் செய்யும் போராட்டம் நடத்த போவதாக, இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.*

*இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின், மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், பொதுச்செயலர் ராபர்ட் வெளியிட்டுள்ள அறிக்கை:*

*🔶அரசு பள்ளிகளில், 2009 மே, 31ல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், ஜூன், 1ல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.*

*🔶ஒரு நாள் வித்தியாசத்தில், அடிப்படை ஊதியத்தில், 3,170 ரூபாய் சம்பளம் குறைந்துள்ளது.*

*🔶ஒரே கல்வி தகுதி, ஒரே பணியில் உள்ள இந்த வேறுபாட்டை களைய, இடைநிலை ஆசிரியர்கள், பல்வேறு போராட்டம் நடத்தியுள்ளனர்.*

*🔶அதன் தொடர்ச்சியாக, வரும், 25ல், உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.*

 *🔶அதன்பின், டிச., 4ல், இரண்டாம் கட்ட போராட்டமும், டிச., 23 முதல், சென்னையில் குடும்பத்துடன் தொடர் போராட்டமும் நடத்தப்படும்.*

*🔶முதலில், குடிநீர் அருந்தாமலும், பின், ரத்த தானம் செய்தும், அதை தொடர்ந்து, ஆசிரியர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்தும், எதிர்ப்பை காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது*.

*இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...