SSTA வின் தீபாவளி வாழ்த்துக்கள்!!!

*வைகறையில் துள்ளி துயிலெழுந்து*


 *நல்லெண்ணெய் குளியல் முடித்து*

*பூரிப்பாய் புத்தாடை அணிந்து*

*நன்நெய்  விளக்கேற்றி வரவேற்கும்*

*தீபாவளி குதூகலம் தானே* ..



*மூத்தோரை வணங்கி ஆசியுடன்*

*பண்டிகைப் பணமும் பெற்று*

*இட்லி, வடை இனிப்பென*

*பலகாரம் பல சாப்பிட்டு*

*அண்டை அயலாருக்கும் பகிர்ந்தளிக்கும்*

*தீபாவளி தித்திப்பு தானே* ...



*தினுசு பட்டாசு கொளுத்தி*

 *பவ்ய புஸ்வான பொன்சுடரால்*

 *தங்க மத்தாப்புச் சிரிப்போடு*

 *வெண் சங்குசக்கரத்தைச் சுழற்றி*

 *அணுகுண்டால் அதிர வெடிக்கும்*

 *தீபாவளி சரவெடி தானே* ..



*எல்லோர் குடும்பமும் ஆனந்தக் கூத்தாட*

 *துயரக்கவலைகளைப் பட்டாசாய் வெடித்து அகற்றி*

 *எல்லோர் வாழ்விலும் இன்பவொளி ஏற்றி*

 *மகிழ்ச்சி மத்தாப்பாய் முகம் மட்டுமின்றி*

 *அகமும் ஜொலிக்கும்  இவ்வினிய தீபாவளி*

 *2009 க்கு பிறகான இடைநிலை ஆசிரியர்களுக்கும்*

*புதிய விடியலாய் பூரிப்பாய் பிறந்து*

*நல்வளங்கொழிக்கச் செய்யும் நாளாய் தொடங்கட்டும்*

 *என வாழ்த்தும்* .....

 *SSTA*
 *மாநில அமைப்பு* .


Thanks to ..
Mr.P.Ashokkumar,
Block Secretary
SSTA Sathyamangalam.
Erode dist

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...