உண்மையை உரைக்கின்றோம். திண்டுக்கல் செயின்ட் மேரிஸ் பள்ளியில் 26/11/18 அன்று நடந்த நிகழ்வு பற்றிய உண்மையை உரைக்கின்றோம்.



எமது பள்ளி மாணவர் 7-ம் வகுப்பு B பிரிவை  சேர்ந்த மாணவன் மெல்கி அந்தோணிராஜ்  காலை இடைவேளையில் 11.06 மணியளவில் கழிவறை   சென்று திரும்பி வரும் போது ஓடி வந்து கால் தடுக்கி விழுந்து கையில் பெரிய காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த மாணவர்கள் அம்மாணவனை தலைமையாசிரியரிடம் கொண்டு வர, தலைமையாசிரியர் ஆசிரியர்கள் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மாணவன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததை ஏற்க மறுத்த  பெற்றோர் தரப்பு நிகழ்வு பற்றிய தவறான செய்திகளை வாட்சப்பில் பரப்பியது. CCTV பதிவில் இருந்த உண்மை நிகழ்வினை பார்த்த பெற்றோர் அனைவர் முன்னிலையில் மன்னிப்பு கோரினர்.
பெற்றோரின் மன்னிப்பு கோரும் ஆடியோ செய்தியையும் மாணவன் கீழே விழும் CCTV வீடியோவையும் உங்கள் பார்வைக்கு பதிவிடுகின்றோம்.

தவறான செய்திகளை பதிவிடும் ஊடகங்களை  கண்டிக்கிறோம்.

கடமை உணர்வோடு கல்வி பணியாற்றும் ஆசிரியர்களையும் பள்ளிகளையும் போற்றுவோம்.

இவண்
செயின்ட் மேரிஸ் பள்ளி நிர்வாகம்
திண்டுக்கல்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...