தமிழகம் முழுவதும் 7,000 விஏஓக்கள் இன்று முதல் ஸ்டிரைக்!!!

கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள
7 ஆயிரம் விஏஓக்கள் இன்று முதல் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் (விஏஓக்கள்) பணிபுரிந்து வருகின்றனர். சாதி சான்று, வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று, பட்டா ேபான்றவற்றை வழங்குவதுடன்,  வருவாய்துறை சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் விஏஓக்கள் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. இதனிடையே, 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  இதனிடையே  இன்று முதல், மாநிலம் முழுவதும் 7 ஆயிரம் விஏஓக்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், வருவாய்த்துறை பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...