மழை பெய்தால் இனி பள்ளிகளுக்கு உடனே விடுமுறை கிடையாது- தமிழகஅரசு அறிவிப்பு

இனி மழை பெய்தால் லீவ் கிடையாது
தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர்
பிரதீப் யாதவ் அறிவித்துள்ள அறிவிப்பில்

பள்ளிகளுக்கு மழை பெய்த உடனேயே விடுமுறை விடக்கூடாது மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும்.

மழையால் பாதிக்கப்படும் பகுதிக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும்.

மழையால் போக்குவரத்து பாதிக்கபடும் நிலை ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும்.

சிறு தூறல் விழுந்தால் உடனே விடுமுறை அறிவிக்கக் கூடாது.

மழை காரணமாக கல்வி மாவட்ட அளவில் அல்லது ஊராட்சி அளவில் மட்டுமே விடுமுறை விடலாம்.

மேலும் மழையை பொறுத்து பள்ளி துவங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு விடுமுறை அறிவிக்கலாம்.

விடுமுறை காரணமாக பாடத்திட்டம் ஏதும் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பள்ளி கல்வித்துறை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...