தமிழக அரசின் மெகா அறிவிப்பு: 18,000 பேருக்கு வேலைவாய்ப்பு!


சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்க புதிதாக 14 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் தமிழக மக்களுக்கு கிடைக்கும்.
தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், உலக முதலீட்டாளர் மாநாடு, வானூர்தி பூங்கா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
முன்னதாக கடந்த டிசம்பர் 24-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 14 தொழிற்சாலைகளை விரிவுபடுத்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.30,500 கோடி தொழில் முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.30,500 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் 14 தொழில் நிறுவனங்களால் 18 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு சென்னையில் வரும் 23 மற்றும் 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அப்போது நிறுவனங்களுக்கு ஒப்புதல் அழிப்பது மேலும் வானுறுதி பாதுகாப்பு தொடர்பான கொள்கையில் மாற்றம் செய்தால் வானுறுதி பாகங்கள் செய்வதற்கான வாய்ப்புகளாக அமையும் இது தொடர்பான கொள்கை முடுவுகள் குறித்தும், மேகதாது அணை, ஸ்டர்லைட் ஆலை குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...