ஜாக்டோ-ஜியோ ஜனவரி-22 முதல் வேலைநிறுத்தம் அறிவிப்பு!!!





மதுரை: ஜனவரி 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் ஜனவரி 22ம் தேதி முதல் அரசு அலுவலகங்களின் இயக்கம் முடங்கும் என்று தெரிகிறது.
ஊதிய முரண்பாடுளைக் களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு வகைகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் அரசு ஊழியர்கள். ஆனால் இதுவரை அதற்கு நிரந்தர தீர்வு எட்டப்படாமல் உள்ளது.
ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது.
இந்த வழக்கு விசாரணை 11ம் தேதி வரவுள்ளது. இந்த நிலையில் காலவரையற்ற போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
ஜனவரி 11ம் தேதி வழக்கில் என்ன மாதிரியான உத்தரவு வந்தாலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் 22ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் தொடங்கும் என மதுரையில் நடந்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயர் நிலைக் கூட்டத்திற்குப் பின்னர் நிர்வாகிகள் கூட்டாக அறிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...