வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு???


தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை, மத்திய அரசு ரூ.5 லட்சமாக உயர்த்தயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடாளுமன்றத்துக்கு விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், வழக்கம்போல் இந்த முறை பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படமாட்டாது. அதற்கு பதிலாக, வரும் பிப்ரவரி 1 -ஆம் தேதி மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.

அதில் முக்கிய அம்சமாக, தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை தற்போதுள்ள 2.5 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது 60 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 10 சதவீதம், ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20 சதவீதம் மற்றும் ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்பட்டு வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...