தனிநபர் வருவாய்: டெல்லி ஆதிக்கம்!


தனிநபர் சராசரி வருவாயில் இந்தியாவின் தேசியச் சராசரியை விட டெல்லியின் வருவாய் மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாகப் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

இதுகுறித்த பொருளாதார ஆய்வறிக்கையை டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பிப்ரவரி 23ஆம் தேதி சட்டமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். அதன்படி, 2018-19ஆம் ஆண்டில் டெல்லியில் தனிநபர் வருவாய் ரூ.3,65,529 ஆக இருக்கிறது. இது தேசியச் சராசரியான 1,25,397 ரூபாயை விட மூன்று மடங்கு அதிகமாகும். டெல்லியின் மொத்த உள்மாநில உற்பத்தி 2018-19ஆம் ஆண்டில் 12.98 சதவிகித உயர்வுடன் ரூ.7.79 லட்சம் கோடியாக இருப்பதாகவும் இந்த ஆய்வறிக்கையில் உள்ள மதிப்பீடுகள் கூறுகின்றன.

2017-18ஆம் ஆண்டில் டெல்லியின் வரி வருவாய் 14.70 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் இதன் வளர்ச்சி 3.03 சதவிகிதம் மட்டுமே. அரசின் நிதி ஒதுக்கீட்டில் அதிகபட்சமாகக் கல்வித் துறைக்கு பட்ஜெட் நிதியில் 27.36 சதவிகிதம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, சமூகப் பாதுகாப்புக்காக 16.63 சதவிகிதமும், மருந்து மற்றும் பொது சுகாதாரத் துறைக்காக 14.81 சதவிகிதமும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக்காக 14.12 சதவிகிதமும், போக்குவரத்துத் துறைக்கு 11.67 சதவிகிதமும், குடிநீர் விநியோகம் மற்றும் துப்புரவுப் பணிகளுக்காக 10.68 சதவிகிதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள காடுகள் மற்றும் மரங்களின் பரப்பு 2017ஆம் ஆண்டில் 299.77 சதுர அடியிலிருந்து 305.41 சதுர அடியாக உயர்ந்துள்ளது. மின் விநியோகத்தைப் பொறுத்தவரையில், 2014-15ஆம் ஆண்டில் 37,484 யூனிட்டிலிருந்து 2017-18ஆம் ஆண்டில் 38,510 யூனிட்டாக உயர்ந்துள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...