நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய முடியாது!

         ஓர் எதிரிக்கு வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீனை ரத்து
செய்வதற்கு முன்பாக, அந்த எதிரிக்கு அறிவிப்பு அனுப்பி, அவர் தரப்பு வாதத்தையும் நீதிமன்றம் கட்டாயம் கேட்க வேண்டும்.

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனை தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது. ஜாமீன் வழங்குவதற்கும், அதனை ரத்து செய்வதற்கும் வேறுபாடு உள்ளது. அவை இரண்டும் வெவ்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டவை.


ஜாமீன் நிபந்தனைகளில் ஒன்றாக எதிரி காவல் நிலையத்தில் அல்லது நீதிமன்றத்தில் முன்னிலையாகி கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தாலும், எதிரி அவ்வாறு செய்யவில்லை என்ற காரணத்திற்காக அவரது ஜாமீனை உடனடியாக ரத்து செய்யக் கூடாது.

எதிரி காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ ஆஜராகி கையெழுத்து போடாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எதிரியின் குடும்பத்தில் ஒரு துயர சம்பவம் நடந்திருக்கலாம் அல்லது நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது ஏழ்மை நிலையின் காரணமாகக் காவல் நிலையத்திற்கு செல்ல அவரிடம் பணம் இல்லாமல் இருக்கலாம் அல்லது புகார்தாரர் அவரைக் கையெழுத்து போடவிடாத படி தடுக்கலாம் அல்லது காவல் துறையினரே எதிரி கையெழுத்து போட விடாமல் தடுக்கலாம்.

 எனவே ஜாமீன் மனுவை ரத்து செய்வதற்கு முன்பாக எதிரிக்கு அதுகுறித்து ஒரு அறிவிப்பை அனுப்பி அவர் தரப்பு நியாயத்தைக் கேட்க வேண்டும்.

ஜாமீன் உத்தரவை ரத்து செய்வது அபாயமான ஒன்றாகும் ஒரு நபருக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை திரும்பப் பெறுகிற ஒரு விஷயமாகும்.

 இயற்கை நீதிமுறைகள் மிகவும் முக்கியமானதாகும். இயற்கை நீதிமுறைகள் குறித்து சட்டத்தில் கூறப்படவில்லை என்றாலும் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் இருக்க வேண்டிய ஒன்றாகும்.

இதற்கு நீதிபதிகளும் விதிவிலக்கானவர்கள் அல்ல. உயர்ந்த நுட்பங்களைக் கொண்ட ஒரு கம்ப்யூட்டர் கூட ஒரு நீதிபதிக்கு மாற்றாகச் செயல்பட முடியாது. ஏனென்றால் கம்ப்யூட்டருக்கு எந்தவிதமான உணர்ச்சிகளோ, உணர்வுகளோ கிடையாது.

எனவே ஜாமீன் வழங்கிப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யும்போது நீதிபதிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...