திருப்பூர்: திருப்பூர், பொம்மநாயக்கன் பாளையம் அரசு பள்ளி மாணவி கவுசல்யா, விடாமுயற்சியால், 'குரூப் - 1' தேர்வில் வெற்றி பெற்று, 'சப்- கலெக்டர்' ஆனார்.திருப்பூரைச் சேர்ந்தவர் கவுசல்யா, 24. பொம்மநாயக்கன் பாளையம், அரசு துவக்கப் பள்ளியில் படித்த இவர், போயம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆறு முதல் எட்டாம் வகுப்பும், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 வகுப்பும் முடித்தார்.எல்.ஆர்.ஜி., கல்லுாரியில், பி.எஸ்.சி., விலங்கியல் பட்டம் பெற்ற இவர், 2013ல் நடந்த, 'குரூப்- 4' தேர்வில் வெற்றி பெற்று, தான் படித்த பொம்மநாயக்கன் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியிலேயே, இளநிலை உதவியாளராக, சேர்ந்தார்.அடுத்தடுத்து அரசு தேர்வு எழுதிய அவர், கடந்தாண்டு நடந்த, 'குருப்- 2' தேர்வில் தேர்ச்சி பெற்று, கோவை மாவட்ட, வேலை வாய்ப்பு அலுவலகத்தில், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலராக, பணியில் சேர்ந்தார்.ஜனவரி முதல், திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலராக பணிபுரிந்தார்.இதற்கிடையில், 2017ல், இவர் எழுதிய, 'குரூப் - 1' தேர்வு முடிவு வெளியாகி, பிப்., 19ல், சென்னையில் கவுன்சிலிங் நடந்தது.இதில் தேர்வான கவுசல்யா, சப் - கலெக்டராக, பணி நியமன ஆணை பெற்றார்.கவுசல்யா கூறுகையில், ''அரசு தேர்வுகளின் மீது கொண்ட ஆர்வம், ஈடுபாடு காரணமாகவே, இந்த வெற்றி சாத்தியமானது. பணியாணை பெற்ற தருணத்தை வாழ்வில் மறக்க முடியாது. சப் - கலெக்டர் பயிற்சிக்கு செல்ல ஆர்வத்துடன் உள்ளேன்,'' என்றார்.
அரசுப்பள்ளியில் படித்து படிப்படியாக உயர்ந்து சாதனை : சப் - கலெக்டரான கவுசல்யா

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...