RRB NTPC Recruitment 2019: ரயில்வேயில் 1 லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்!


 இந்திய ரயில்வே துறையில் என்.டி.பி.சி பணியிடத்தில் வேலை செய்ய விரும்பும் நபர்கள் பிப்ரவரி 28-ம் தேதியிலிருந்தே பதிவு செய்துக் கொள்ளலாம்

 RRB NTPC Recruitment 2019 Notification: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ரயில்வே துறையில் 1.3 லட்சம் காலியிடங்கள் இருப்பதாக, பிப்ரவரி 23 – மார்ச் 1 தேதியிட்ட வேலை வாய்ப்பு செய்தித்தாளில் அறிவித்துள்ளது. இது குறித்து ஆர்.ஆர்.பி-யின் சேர்மன் சுப்ரதா சர்கார் இந்தியன் எக்ஸ்பிரஸ் இனையதளத்துக்கு அளித்த பேட்டியில், “ ஆர்.ஆர்.பி-யின் வேலை வாய்ப்பு அறிவிப்பு குறித்த தகவல், பிப்ரவரி 23-ம் தேதி வெளியாகும் வேலைவாய்ப்பு செய்தித்தாளில் வெளியாகிறது. பிறகு பிப்ரவரி 28-ம் தேதியும் வெளியாகும். இந்திய ரயில்வே துறையில் என்.டி.பி.சி பணியிடத்தில் வேலை செய்ய விரும்பும் நபர்கள் பிப்ரவரி 28-ம் தேதியிலிருந்தே பதிவு செய்துக் கொள்ளலாம்” என்றார்.

பொதுப்பிரிவினர் ரூ.500, இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு ரூ.250 என இதற்கான விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காலியிட விபரங்கள் 

மொத்த காலியிடம் – 1,30,000

லெவல் 1 போஸ்ட் – 1,00,000

பாரா மெடிக்கல் ஸ்டாஃப் – 30000

முக்கிய தேதிகள் 

ஆன்லைன் பதிவு  (என்.டி.பி.சி) – பிப்ரவரி 28

பாரா மெடிக்கல் ஆன்லைன் பதிவு – மார்ச் 4

இந்த ஆட்சேர்ப்பு வாய்ப்பினை பொருளாதாரத்தில் பின் தங்கி, 10 சதவீத இட ஒதுக்கீடு பெற்றவர்களுக்கும் பொருந்தும்.

முன்னதாக ரயில்வே துறையில் 2.50 லட்சம் பணியிடங்கள் இருப்பதாக ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் க்ரூப் டி மற்றும் என்.டி.பி.சி இரண்டு தேர்வும் ஆகஸ்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...