நிதி நெருக்கடியால் வரலாற்றில் முதன்முறையாக சம்பளம் அளிக்காத பி.எஸ்.என்.எல்...!!


பொதுத் துறை டெலிகாம் நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிதி இடர்பாடுகள் காரணமாக 1.76 லட்சம் ஊழியர்களுக்குப் பிப்ரவரி மாதச் சம்பளத்தை நிலுவையில் வைத்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக பிஎஸ்என்எல் நிறுவனம் நட்டத்தில் இயங்கி வரும் நிலையில் முதல் முறையாக ஊழியர்களின் சம்பளத்தை நிலுவையில் வைத்துள்ளது.


பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கங்கள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹாவை அணுகி ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்காக நிதியை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ஊழியர்கள் சம்பளம் மட்டுமில்லாமல் சேவை செயல்பாடுகளுக்கும் தொலைத்தொடர்புத் துறை நிதியை ஒதுக்கவில்லை என்று கூறுகின்றனர்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 55 சதவீத வருவாய் ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டும் செலவிடப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டு 8 சதவீதம் கூடிக்கொண்டும் வருகிறது.

மணிகன்ட்ரோல் தளத்திற்குக் கிடைத்த தகவலின்படி ஜம்மு காஷ்மீர், ஒடிஷா, கேரளா மற்றும் டெல்லியில் உள்ள ஊழியர்களின் சம்பளம் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

மத்திய அரசு ஊதியத்தை வழங்க எந்த ஒரு ஆதரவையும் அளிக்கவில்லை. எனவே வரும் வருவாயை வைத்து சம்பள பிரச்னையைச் சரிசெய்து வருகிறோம் என்று பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் கூறுகின்றனர்.

*நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் மார்ச் மாத சம்பளமும் தாமதமாகத்தான் வழங்கப்படும் என்று கூறுகின்றனர். வங்கிகளில் கடன் பெற முயன்றால் அதற்கும் தொலைத்தொடர்புத் துறை அனுமதி அளிக்காமல் உள்ளது.

பி.எஸ்.என்.எல் நிறுவனம் 2017 நிதி ஆண்டில் 4,786 கோடி ரூபாயும், 2018 நிதி ஆண்டில் 8,000 கோடி ரூபாயும் நட்டம் அடைந்துள்ளது. 2019 நிதி ஆண்டில் மேலும் கூடுதலான நட்டத்தையே பிஎஸ்என்எல் பதிவு செய்யும் என்றும் கூறுகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...