தொடக்கக் கல்வி - வழக்குகள் - சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் சார்பாக மாவட்ட வாரியாக சீராய்வு மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு.


தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண். 2500 / எப்1 / 2012, நாள்.07.06.2012
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கிளையில் நிலுவையிலுள்ள வழக்குகள், தீர்ப்பாணை வழங்கப்பட்டு செயல்படுத்தாத வழக்குகள் மற்றும் எதிரவாதவுரை தாக்கல் செய்த மற்றும் செய்யப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் சார்ந்த விவரங்கள் கொண்டுவர தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே சார்ந்த மாவட்டங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் சார்ந்த கோப்புகள் எதுவும் விடுபடாமல் படிவத்தில் பூர்த்தி செய்து நேரில் தவறாமல் ஆஜராகுமாறு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
நாள். 12.06.2012 முதல் 22.06.2012
மாவட்ட வாரியாக ஆய்வு நிரல் :- 

12.06.2012 - காலை 9-30 மணி - சென்னை,திருவள்ளூர்,வேலூர்,காஞ்சிபுரம்
13.06.2012 - காலை 9-30 மணி - கிருட்டிணகிரி,திருவண்ணாமலை,விழுப்புரம், கடலூர்
14.06.2012 - காலை 9-30 மணி - தருமபுரி,நாமக்கல்,சேலம்
15.06.2012 - காலை 9-30 மணி - திருச்சி,பெரம்பலூர்,அரியலூர்,கரூர்
16.06.2012 - காலை 9-30 மணி - தஞ்சை,நாகை,திருவாரூர்,புதுக்கோட்டை
18.06.2012 - காலை 9-30 மணி - ஈரோடு,திருப்பூர்,கோவை,நீலகிரி
19.06.2012 - காலை 9-30 மணி - திண்டுக்கல்,தேனி,திருநெல்வேலி
21.06.2012 - காலை 9-30 மணி - சிவகங்கை,இராமநாதபுரம்,தூத்துக்குடி
22.06.2012 - காலை 9-30 மணி - மதுரை,கன்னியாகுமரி,விருதுநகர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...