ஜி.சாட் 10 செயற்கை கோள் 22ம் தேதி செலுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் பேட்டி


தகவல் தொழில்நுட்பத்திற்கு பயன்படக்கூடிய ஜி.சாட் 10 செயற்கை கோள் வரும் 22ம் தேதி விண்ணில்
செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்தியாவின் 100வது ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் (இஸ்ரோ) ராதாகிருஷ்ணன் இன்று காலை விஐபி தரிசனம் மூலம் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு, கோயில் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் வெளியே வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் 100வது ராக்கெட் பிரான்ஸ், ஜப்பான் ஆகிய 2 நாடுகளின் செயற்கை கோளுடன் நேற்று பிரதமர் மன்மோகன்சிங் முன்னிலையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைகோள்கள் நல்லமுறையில் செயல்பட தொடங்கியுள்ளது. தகவல் தொழில் நுட்பத்திற்கு பயன்படுத்தக்கூடிய ஜி.சாட் 10 என்ற செயற்கைகோள் வரும் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இவ்வாறு ராதா கிருஷ்ணன் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...