பிரிவு வாரியாக நல்லாசிரியர் விருது: தலைமை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

பிரிவு வாரியாக ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில், செப்டம்பர் 5ம் தேதி
ஆசிரியர்களை கவுரவிக்கும் பொருட்டு, நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. பள்ளிக் கல்வித்துறையில் கல்வி மாவட்டத்திற்கு இருவர் வீதமும், துவக்கக் கல்வித்துறையில் 3 பேர் வீதமும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த விருதுகள் பெறும் ஆசிரியர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்று வழங்கப்படுகிறது. அதேபோல தேசிய அளவில், மாவட்டத்திற்கு ஒருவர் நல்லாசிரியர் விருது பெறுகிறார். அவருக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படுகிறது.
இந்த விருதுகளை, ஆசிரியர்களின் பிரிவு வாரியாக வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. தமிழக உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறியிருப்பதாவது:
தற்போது பள்ளிக் கல்வித்துறை, துவக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விருதை, தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி, இடைநிலை, சிறப்பு ஆசிரியர்கள் என பிரிவு வாரியாக விருது வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் மதிப்பை உயர்த்தும் வகையில், தற்போது மாநில அளவில் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசு ரூ.5 ஆயிரம் என்பதை, ரூ.ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும். மேலும் ஊக்க ஊதியம், பஸ்களில் இலவச பாஸ் வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.
தினமலர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...