பி.எட்.: ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு


தேனி மாவட்டத்தில் பி.எட். தேர்ச்சி பெற்றவர்களுக்கு அந்தந்த கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து,
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2012-ம் ஆண்டு பி.எட். தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு செப். 1-ல் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது.தேர்ச்சிபெற்ற மாணவர்கள், அந்தந்த கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை மேற்கொள்ளலாம். இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவு மேற்கொள்வதில் ஏற்படும் அலைச்சல் மற்றும் கால விரயத்தை தவிர்க்கலாம் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...