சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கான உதவித்தொகைக்கான விண்ணப்பம் பெற, செப்டம்பர், 30ம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சேலம் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:அரசு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அரசால் உதவி பெறும் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை, பயிலும் சிறுபான்மையின(கிறிஸ்துவர், முஸ்லீம், பாரசீகர், புத்த மதத்தினர், சீக்கியர்) மாணவ, மாணவியருக்கு, 2012-13ம் ஆண்டுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங்களை பெறுவதற்கான, கடைசி தேதி, செப்டம்பர், 30ம் தேதி வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது.கல்வி நிலையங்கள் மாணவ, மாணவியரிடம் இருந்து, செப்டம்பர், 30ம் தேதிக்குள் இதற்கான விண்ணப்பங்களை சேகரித்து, அக்டோபர், 5ம் தேதிக்குள், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.