ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த சட்டப்பூர்வமான உரிமை இல்லை:முன்னாள் எம்.எல்.சி. சி.ஆர்.லட்சுமிகாந்தன்

ஆசிரியர் நியமனத்திற்காக மட்டும் உருவாக்கப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஆசிரியர்களை நியமனம்
செய்ய தேர்வு செய்யும் உரிமை மட்டுமே உண்டு. தகுதித் தேர்வு நடத்த சட்டப்பூர்வமான உரிமை அதற்கு இல்லை என முன்னாள் மேலவை உறுப்பினர் மற்றும் முன்னாள் மாநில கல்வி ஆலோசனைக்குழு உறுப்பினருமான சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து கட்டாய இலவசக்கல்வி சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளை மத்திய, மாநில அரசுகள் நடத்துகின்றன. ஆசிரியர்களுக்கு பருவந்தோறும் அல்லது ஆண்டு தோறும் மாறி வரும் பாடத் திட்டத்திற்கேற்ப பயிற்சி வகுப்புகளை நடத்துவதுதான் பலன் தருமே ஒழிய, தகுதித் தேர்வுகளால் நிச்சயம் பலன் ஏற்படாது. மத்தியஅரசு சட்டத்தின்படி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மட்டுமே, ஆசிரியர்களுக்குத் தேர்வு நடத்த முறையான அமைப்பாகும்.  மத்தியஅரசு சட்டத்தின்படி ஆசிரியர் கல்வி நிறுவனமும், மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மட்டுமே உரிமை பெற்றவை. 
 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...