அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

அரசு பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறவும், அனைவரும் தேர்ச்சி பெறவும், பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி
அளித்து, 100 சதவீதம் தேர்ச்சி பெற திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, மண்டல அளவில், மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பில், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான, ஒரு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது. அக்டோபர் 4ல் மதுரையில் நடக்கும்,இப்பயிற்சி முகாமில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின்,மாநில திட்ட இயக்குநர் இளங்கோவன் தலைமையில், நிர்வாக ஆலோசகர்கள், கல்வியாளர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...