உயர்கல்வியில் அதிகரிக்கும் பெண்களின் எண்ணிக்கை!

உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துள்ளது என்று யு.ஜி.சி அறிக்கை தெரிவிக்கிறது.
சுதந்திரத்தின்போது, உயர்கல்விக்கான மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில், பெண்களின் எண்ணிக்கை 10%க்கும் குறைவாகவே
இருந்தது. ஆனால், கடந்த 2010-11ம் ஆண்டில், அது 41.05%ஆக உயர்ந்தது.
இந்த 2010-11 கல்வியாண்டில், உயர் கல்விக்கு விண்ணப்பித்த 169.75 லட்சம் பேரில், 70.49 லட்சம் பேர் பெண்கள். ஆனால், கடந்த 2006-07ம் கல்வியாண்டில், வெறும் 47.08 லட்சம் பெண்களே உயர்கல்விக்கு விண்ணப்பித்தனர் என்று யு.ஜி.சி. வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
உயர்கல்வியில், பெண்கள் அதிகமாக சேரும் மாநிலங்களில் கோவா முதலிடமும், கேரளா இரண்டாமிடமும் வகிக்கின்றன. ஆனால், இந்த விஷயத்தல் பீகாரின் நிலைமை மோசமாக உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...