மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் அரசு மருத்துவமனையில் இன்று நடக்கிறது


மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், இன்று காலை, சேலம் அரசு மருத்துவமனையில் நடக்கிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கல்வித்திட்டத்தில் ஆண்டுதோறும், மருத்துவமுகாம்கள் நடத்தப்பட்டு, குழந்தைகளின் குறைபாடுகள் கண்டறியப்படுகிறது.மேலும் அம்முகாம்

மூலம் தேசிய அடையாள அட்டை வழங்குதல், அவர்களுக்கான உபகரணம் வழங்குதல், அறுவை சிகிச்சை செய்தல் உள்ளிட்ட தொடர் செயல்பாடுகளும் நடத்தப்படுகிறது.சேலம் ஊரக வட்டார வளமையம் சார்பில், இன்று காலை, 10 மணி முதல், மதியம், 1.30 மணி வரை, சேலம் அரசு மருத்துவமனையில் நடக்கிறது.
இதுகுறித்து ஊரக வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேகர் கூறியதாவது:செப்டம்பர், 13ம் தேதி, காலை, 10 மணி முதல், மதியம், 1.30 மணி வரை, சேலம் அரசு மருத்துவமனையில், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடக்கிறது. இதில் பள்ளி செல்லும் அல்லது பள்ளி செல்லாத உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோர், மனவளர்ச்சி குன்றியவர், கண்பார்வையற்றோர் மற்றும் அனைத்து மாற்றுத்திறன் கொண்ட, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில், அடையாள அட்டை, உதவி உபகரணம், அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் உள்ளிட்டவைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். ஊரக வட்டார வளமைய பகுதிகளில் இருப்போர் இதில் கலந்து கொண்டு பயனடையலாம்.ரேஷன் கார்டு அசல், ஊனம் தெரியும்படி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ நான்கு, ரேஷன் கார்டு நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது இருப்பிட சான்று அல்லது பள்ளி தலைமை ஆசிரியர் சான்று உள்ளிட்டவைகளுடன், இதில் கலந்து கொள்ளலாம். மருத்துவ முகாமுக்கு வரும் குழந்தைகளுக்கு, உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் விபரங்களுக்கு, 97888 58939 என்ற மொபைல்ஃபோன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...