மதுரை சி.இ.ஓ., அலுவலகம்: ரூ.30 லட்சத்தில் புதுப்பிப்பு

மதுரையில், முதன்மை கல்வி அலுவலகத்தை (சி.இ.ஓ.,) புதுப்பிக்க ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுதல்லாகுளத்தில் பழமையான இக்கட்டடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. 1916ல் கல்வி துறைக்கு ஒதுக்கப்பட்டது. இவ்வளாகத்தில்,
அனைவருக்கும் கல்வி திட்டம், அனைவருக்கும் இடைநிலை கல்வி, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகங்கள் உள்ளன.மழை பெய்தால் சுவர் வழியே தண்ணீர் இறங்குகின்றன. மின் வயர்கள் பழமையான, ஆபத்தான நிலையில் உள்ளன. நாகராஜமுருகன் சி.இ.ஓ.,வாக பொறுப்பேற்றதும், வளாகத்தின் ஒரு பகுதி, ரூ.7 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அனைத்து பகுதிகளையும் புதுப்பிக்க, ரூ.30 லட்சம் ஒதுக்கி, துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். இப்பணி பொதுப்பணித் துறை மூலம் நடக்கும். இதன் காரணமாக, அனைவருக்கும் கல்வித்திட்ட அலுவலக கட்டடத்தில், சி.இ.ஓ., அலுவலகம் தற்காலிகமாக செயல்படவுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...