"மாணவரிடம் நன்கொடை வசூலித்தால் அபராதம்'


மாணவரிடம் நன்கொடை வசூலித்தால், 10 மடங்கு அபராதம் விதிக்கப்படும்,' என, கட்டாய கல்வி உரிமை சட்ட பயிற்சி வகுப்பில், கல்வி அதிகாரி தெரிவித்தார்.அன்னூர் ஒன்றியத்திலுள்ள துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி
ஆசிரியர்களுக்கு, "இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009' குறித்து, மூன்று நாள் பயிற்சி வகுப்பு நடந்தது.துவக்க நாளன்று, அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார மேற்பார்வையாளர் அண்ணாதுரை பேசியதாவது:
இச்சட்டத்தில், மாணவர் சேர்க்கை, ஆசிரியர் பொறுப்பு என, அனைத்து அம்சங்களும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்பதே அடிப்படை அம்சம். கல்வியாண்டின் இடையில், எப்போது மாற்றுச்சான்றிதழ் கேட்டாலும், உடனே வழங்க வேண்டும். மாற்றுச்சான்று தர மறுப்போர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தையின் வயது சான்று இல்லாத காரணத்தால், சேர்க்கைக்கு மறுக்கக்
கூடாது. பெற்றோர் அளிக்கும் உறுதிமொழியை ஏற்று, பள்ளியில் சேர்க்க வேண்டும். தலைமை ஆசிரியர் அல்லது பள்ளி நிர்வாகம், குழந்தைகளிடம் நன்கொடை வசூலிக்கக்கூடாது. நன்கொடை பெற்றால், அத்தொகையின் 10 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும். எந்த குழந்தையையும், தொடக்கக் கல்வி முடிக்கும்வரை, எந்த வகுப்பிலும் நிறுத்தம் செய்தலோ, பள்ளியிலிருந்து நீக்குவதோ கூடாது.

இவ்வாறு, அண்ணாதுரை பேசினார்.இரண்டாம் நாள் பயிற்சி வகுப்பில், கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி பேசுகையில்,""கல்வியாண்டு முழுவதும், மாணவர்களை சேர்க்கலாம். இருபாலருக்கும், கழிப்பிட வசதி இருக்க வேண்டும். எந்த குழந்தையையும், மனரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ துன்புறுத்தக்கூடாது,'' என்றார்.மூன்றாம் நாள் பயிற்சியில், வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ரங்கராஜ் பேசுகையில்,""ஆசிரியர்கள் பள்ளிக்கு, நேரம் தவறாமல் வர வேண்டும். தொடக்கப் பள்ளிகள் ஆண்டுக்கு 200 நாட்களும், உயர்தொடக்கப் பள்ளிகள் 220 நாட்களும் செயல்பட்டிருக்க வேண்டும். ஆசிரியர்கள் தனி டியூஷன் எடுக்கக்கூடாது. அரசு அளிக்கும் பணியைத் தவிர இதர கல்வி அல்லாத பணிகளில் ஈடுபடக்கூடாது. மாணவரை பள்ளியில் சேர்க்க தேர்வு நடத்தினால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,'' என்றார்.ஆசிரிய பயிற்றுனர்கள், சட்டத்தின் அம்சங்களை விளக்கி, ஆசிரியர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...