ஒரே நாளில் 3 ஆயிரம் காவலர்கள், துப்புரவாளர்களுக்கு ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் பணி நியமனம்

பள்ளிக் கல்வித் துறையில் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2,999 காவலர்கள், துப்புரவாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
பணி நியமன கலந்தாய்வுகளில் ஒரே நாளில் இவ்வளவு அதிகமானோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிக் கல்வித் துறையில் 5 ஆயிரம் காவலர்கள்,
துப்புரவுப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதனடிப்படையில், வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து தகுதியானவர்களின் பட்டியல் கோரப்பட்டது.
இதில் முதல் கட்டமாக 3,708 பேர் கொண்ட பட்டியல் பெறப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் பணி நியமன ஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மாவட்டக் கல்வி அலுவலர்களால் அந்தந்த கல்வி மாவட்டங்களில் ஆன்-லைன் கலந்தாய்வு நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் 709 பேர் பங்கேற்கவில்லை.
இப்போது வராதவர்களுக்கு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் பணி நியமனம் வழங்கப்படும். மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து இரண்டாவது பட்டியல் கோரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...