"கல்லூரிகளில் 3%சூரிய மின் சக்தியைப் பயன்படுத்த இலக்கு'

வரும் 2013-ம் ஆண்டுக்குள் அனைத்துக் கல்லூரிகளிலும் மொத்தப் பயன்பாட்டில் 3 சதவீத மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்துக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களின் கூட்டம் அண்ணா பல்கலைக்கழகத்தில்
வரும் டிசம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ளதாக உயர் கல்வித் துறை சிறப்புச் செயலாளர் பி.டபிள்யூ.சி. டேவிதார் கூறினார்.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர்களுக்கான 3 நாள் பயிலரங்கு சென்னையில் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்த மின்சார பயன்பாடு, கல்லூரிகளின் மேல் தளங்களில் உள்ள இட நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை டிசம்பர் 4-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக, பி.டபிள்யூ.சி. டேவிதார் கூறியது:
கல்லூரிகளின் மொத்த மின் பயன்பாட்டில் 6 சதவீத மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரமாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதன்படி, வரும் 2013-ம் ஆண்டில் கல்லூரிகளுக்குத் தேவையான 3 சதவீத மின்சாரத்தை சூரிய மின்சக்தி மூலம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டில் இது 6 சதவீதமாக அதிகரிக்கப்படும் இது தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 6-ம் தேதி சென்னை மண்டல அளவில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் அதிகாரிகள் சூரிய மின்சக்தி உற்பத்திக்குத் தேவையான கருவிகள், மானியங்களைப் பெறுவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விளக்கம் அளிப்பார்கள். இந்தக் கூட்டத்தில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 100 கலை, அறிவியல் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்கின்றனர் என்றார்.
400 புதிய படிப்புகள்: அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கான பயிற்சியைத் தொடங்கி வைத்து உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் பேசியது:
முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் புதிதாக 400 கலை, அறிவியல் படிப்புகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார். இந்தப் படிப்புகளில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 15 கல்லூரிகளில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை சமமானது. உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் இதன் மூலம் அதிகரிக்கும். இந்தக் கல்லூரிகளில் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
வெளிநாடுகளுக்கு 20 மாணவர்கள்: அரசுக் கல்லூரிகளில் பயிலும் 20 மாணவர்களை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்க அனுப்புவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்தத் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றார் அவர்.
கல்லூரிகளுக்கு தரவரிசை: உயர் கல்வித் துறைச் செயலாளர் டி.எஸ். ஸ்ரீதர் பேசும்போது, ""அரசு கல்லூரிகளை தரவரிசைப்படுத்த வேண்டும். கல்லூரிகளில் கற்றுத்தரப்படும் கல்வி, ஆராய்ச்சி போன்றவற்றின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கி அவற்றை தரவரிசைப் படுத்தலாம். அதன்மூலம் கல்லூரிகளில் ஆரோக்கியமான போட்டி ஏற்படுவதற்கு வழிவகுக்கும்'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...