தமிழக கால்பந்து அணியில் சிவகாசி பள்ளி மாணவர்


தமிழக கால்பந்து அணியில் சிவகாசி ஒய்.ஆர்.டி.வி. மெட்ரிக். மேநிலைப்பள்ளி மாணவர் இடம் பெற்றுள்ளார்.
 தமிழ்நாடு மாநில கால்பந்து அசோசியேசனால் 12 வயதுக்குட்பட்டோருக்கான ( 8 பேர் விளையாடும் கால்பந்தாட்டத்திற்கு ),

தமிழக அணி தேர்வுப்போட்டி மதுரை டான்போஸ்கோ ஐ.டி.ஐ. விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு கால்பந்தாட்டக் கழக தலைவர் சீனிமுகமது தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிருந்தும் 60 மாணவர்கள் பங்கேற்றனர். முதலில் 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் அதிலிருந்து 11 மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட 11 மாணவர்களில் எம்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் எம்.முகமதுமதார் பாசிலும் ஒருவர் ஆவார்.
 இந்த மாணவர் கொல்கத்தாவில் நடைபெற உள்ள மாநிலங்களுக்கிடையிலான கால்பந்து போட்டியில் விளையாடும் தமிழக அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த மாணவரை பள்ளித் தாளாளர் என்னார்கே ரவீந்திரன், நிர்வாகி திலகவதி, முதல்வர் எல்.முரளி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...