சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி

தண்டரை இருளர் பழங்குடி பெண்கள் நல அமைப்பு மற்றும் செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி ஆகியவை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தண்டரை இருளர் பழங்குடி பெண்கள் நல அமைப்பின் இயக்குனர் கே.கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். அமைப்பின் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கே.சிகாமணி வரவேற்றார். புனித சூசையப்பர் மேல்லநிலைப்பள்ளி தாளாளர் மற்றும்
தலைமையாசிரியர் ஜே.சேசுராஜ் முன்னிலை வகித்து பேசினர்.
செங்கல்பட்டு மரம் வளர்ப்போர் சங்கத் தலைவர் பா.ச.மாசிலாமணி, சங்கீத மங்கலம் மரம் கருணாநிதி, சி.ஆர்.ஓ. திட்ட அலுவலர் கோமதி, இருளர் பழங்குடி பெண்கள் நல அமைப்பின் தலைவர் எஸ்.வசந்தா, செயலாளர் கே.கனகா, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.ஜேக்கப் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் நெடுஞ்சாலை, செங்கல்பட்டு ஜி.எஸ்.டி. சாலை, மணிக்கூண்டு மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைபெற்றது.
புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் அருள் அந்தோணி நன்றி கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...